தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தாந்த ரீதியாக தோற்கக்கூடாது சிவகுமாருக்கு சித்து 'அட்வைஸ்'

 சித்தாந்த ரீதியாக தோற்கக்கூடாது சிவகுமாருக்கு சித்து 'அட்வைஸ்'

 சித்தாந்த ரீதியாக தோற்கக்கூடாது சிவகுமாருக்கு சித்து 'அட்வைஸ்'


ADDED : ஜூன் 01, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'சி த்தாந்தரீதியாக தோற்க கூடாது' என, சிவகுமாருக்கு, சித்தராமையா அறிவுரை வழங் கி உள்ளார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:

சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள சிவகுமாருக்கு எனது வாழ்த்துகள். சிவகுமாரின் மனஉறுதி, கட்சிக்காக அவரது உழைப்பு, கட்சி மீதான அவரது அசைக்க முடியாத விசுவாசத்தை நான் உன்னிப்பாக கவனித்து இருக்கிறேன்.

கர்நாடகா தனிநபர் வருமானத்தில் நாட்டின் முதலிடம் வகிப்பதுடன், செல்வம், அதிகாரம், வாய்ப்புகளை சமமாக பகிர்ந்து அளிப்பதில் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது.

நாம் துவங்கிய ஒவ்வொரு திட்டமும், மற்ற மாநிலங்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடக முதல்வராக எட்டு ஆண்டுகள், கன்னடர்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, கர்நாடகாவை வளமான, தன்னிறைவு பெற்ற, சுயமரியாதையுள்ள மாநிலமான உருவாக்கியதில் பெருமைப்படுகிறேன்.

இனி வளர்ச்சி வண்டியை முன்னோக்கி இழுத்து செல்லும் பொறுப்பு உங்கள் - சிவகுமார் தோள் மீது உள்ளது. இதற்கு தேவையான அர்ப்பணிப்பு, திறமை, தொலைநோக்கு பார்வை உங்களிடம் இருப்பதாக நம்புகிறேன்.

தற்போது நாடு முழுதும் பொருளாதார பாதுகாப்பின்மை நிலவும் சூழலில், மாநில மக்களும் எதிர்காலம் குறித்து கவலை கொண்டு உள்ளனர். அவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைத்து, மாநிலத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்துவது உங்கள் பொறுப்பு.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அரசியல்ரீதியாக சிறிய பின்னடைவை சந்தித்து உள்ளது. நாம் தேர்தலில் தோற்கலாம். ஆனால் சித்தாந்தரீதியாக தோற்று விட கூடாது. ஒரு கட்சி சித்தாந்தரீதியாக தோற்றால், அது தேர்தலில் வெற்றி பெறாமல் அழிந்துவிடும் என்று நம்புபவன் நான்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் தியாகங்களால் கட்டப்பட்ட நல்லிணக்கம், ஜாதி, மதத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கேள்வி கேட்பவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

காந்தியை கொன்ற கோட்சேயை புகழ துடிக்கின்றனர். இரண்டாவது சுதந்திர போராட்டம் தேவை என்ற காலத்தில் நாம் உள்ளோம். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, ஏழு கோடி கன்னடர்களும் உங்களுடன் இருப்பர்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us