தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு

  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு

  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 01, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: மங்களூரில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 1,372 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 6.24 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தட்சிண கன்னடாவின் மங்களூரு நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும், வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை. இதனால், சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. அதுபோல, ஹெல்மெட் அணியாமல் பலரும் பைக், ஸ்கூட்டர்களை ஓட்டுகின்றனர்.

இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் போக்குவரத்து போலீசார், கடந்த வாரம் முழுதும் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகரில் உள்ள பல முக்கிய சந்திப்புகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 1,050 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 4.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 'ஒன்வே' யில் தவறான திசையில் வாகனம் ஓட்டிய 322 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து 1.61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை 7 நாட்கள் நடந்தது.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'விழிப்புணர்வுக்காகவே அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகள் வருங்காலத்திலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us