/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்து, சிவா காங்.,கின் 2 கண்கள்: எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ' ஐஸ்'
/
சித்து, சிவா காங்.,கின் 2 கண்கள்: எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ' ஐஸ்'
சித்து, சிவா காங்.,கின் 2 கண்கள்: எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ' ஐஸ்'
சித்து, சிவா காங்.,கின் 2 கண்கள்: எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ' ஐஸ்'
ADDED : நவ 19, 2025 08:55 AM

பெங்களூரு: “சித்தராமையாவும், சிவகுமாரும் காங்கிரசின் இரு கண்கள் போன்றவர்கள்,” என, மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா 'ஐஸ்' வைத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'அமை ச்சரவை மாற்றத்தின்போது, எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்' என, நான் யாரிடமும் கேட்க மாட்டேன். ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். சித்தராமையா ம.ஜ.த.,வில் இருந்தபோது, அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. தற்போது வரை எங்களுக்குள் நல்ல பந்தம் உள்ளது.
துணை முதல்வர் சிவகுமார், எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். என் சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு, இருவரும் எனக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல்வர் பதவியில் மாற்றம் குறித்து, என்னிடம் எந்த தகவலும் இல்லை. எதுவாக இருந்தாலும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் வேணுகோபால் பார்த் துக் கொள்வர்.
கடந்த 2023 தேர்தலுக்கு முன்பு, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறினர். ஆனால் மக்கள் தீர்ப்பு வேறு விதமாக இருந்தது. அரசியலில் எதுவும் நடக்கலாம். ஜனவரி மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என, பா.ஜ., தலைவர்கள் எதிர்பார்ப்பது பேராசை.
சித்தராமையாவு ம், சிவகுமாரும் காங்கிரசின் இரு கண்கள் போன்றவர்கள். ஒரு கண்ணை இழந்தாலும், கட்சிக்கு தான் பாதிப்பு. அவர்கள் இருவரை தவிர பரமேஸ்வர், எம்.பி.பாட்டீல், ஹெச்.கே.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டோரும் முக்கிய தலைவர்கள். கட்சியை வலுப்படுத்த, இவர்கள் ஆலோசனையை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

