UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 08:34 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையின் பவர்லால் பேட்டையில், ஐந்து மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் வழங்க கோரி, அப்பகுதி மக்கள், குடிநீர் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பவர்லால் பேட்டையில், 700 குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் டேங்கர் லாரியில் விற்பனை செய்யப்படும் நீரை, மூன்று குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு செய்யப்படாத நீரை தான் குளியல், குடிக்க, சமையலுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
