ரயில், மெட்ரோவில் பயணிக்க ஜூனில் ஒரே கார்டு அறிமுகம்
ரயில், மெட்ரோவில் பயணிக்க ஜூனில் ஒரே கார்டு அறிமுகம்
ADDED : ஏப் 26, 2026 12:37 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: மெட்ரோ ரயில், பி.எம்.டி.சி., பஸ்களில் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிக்கும் முறை, ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, வேலைக்கு செல்வோர், பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இம்முறையை மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.
இவ்வகையில், பி.எம்.டி.சி., பஸ், மெட்ரோ ரயில் இரண்டிலும் பயணிக்கும் வகையில் கார்டுகள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் பஸ், மெட்ரோ ரயில் இரண்டிலும் பயணிக்கலாம். இந்த கார்டுகள், ஜூன் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
