ADDED : ஜூலை 25, 2026 11:35 PM

மங்களூரு: ''எஸ்.ஐ.ஆர்., பணிகளால் ஓட்டுரிமை பறிபோகாது,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணியால் தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் தங்கள் ஓட்டுரிமை யை இழக்க மாட்டார்கள். எஸ்.ஐ.ஆர்., பணிகளால் ஓட்டுரிமை பறிபோகாது.
எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்த பின் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், படிவம் -- 6ஐ சமர்ப்பிப்பதன் மூலம் பெயர்களை சேர்க்க முடியும். வாக்காளர்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை பெற்ற பிறகு, டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை துவங்கும்.
வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் போது அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில், 18,03,766 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவற்றில், 14,97,139 படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. எஸ்.ஐ.ஆர்., குறித்த கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
