தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறு தொண்டநாயனார் குரு பூஜை காலபைரவருக்கு இன்று சிறப்பு

சிறு தொண்டநாயனார் குரு பூஜை காலபைரவருக்கு இன்று சிறப்பு

சிறு தொண்டநாயனார் குரு பூஜை காலபைரவருக்கு இன்று சிறப்பு


ADDED : ஏப் 28, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவாஜி நகர்: சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று, சிறுதொண்ட நாயனார் குரு பூஜையை ஒட்டி, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

திருச்செங்காட்டாங்குடியைச் சேர்ந்தவர் சிறு தொண்ட நாயனார். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார். இவரது மனைவி திருவெண்காட்டு நங்கை. இவர்களின் மகன் சீராளன். பரஞ்சோதியார், அமைச்சர் பதவியில் இருந்து பல போர்களை நடத்தி, வாதாபி வரை சென்று வெற்றி பெற்றவர்.

இவரின் வெற்றி, சிவன் அருளால் கிடைத்தது என்பதை உணர்ந்த மன்னன், அவரிடம், சிவப்பணி செய்யுமாறு கூறினார்.

மன்னர் கொடுத்த பொருளுடன் திருச்செங்காட்டான்குடிக்கு பரஞ்சோதியார் வந்தார். இவரின் பெருமையை, உலகிற்கு எடுத்துரைக்க இறைவன் சிவன் விரும்பினார்.

ஒரு நாள் உணவளிக்க அடியார்கள் யாரும் வரவில்லை. அப்போது அகோர சன்னியாசியாக சிவன், அவர் முன் தோன்றினார்.

சன்னியாசியை பார்த்த பரஞ்சோதியார், அவரை உணவுக்கு அழைத்தார். அதற்கு சிவபெருமானோ, 'நான் ஆண்டுக்கு ஒருமுறை தான் உணவு சாப்பிடுவேன். அதுவும் தம்பதிக்கு ஒரே மகனை, தாயும், தந்தையும் முகமலர்வுடன், குழந்தையை சமைத்து கொடுத்தால் மட்டுமே உணவு சாப்பிடுவேன்' என்றார்.

இதை கேட்ட பரஞ்சோதியார், மகிழ்ச்சி அடைந்து தன் ஒரே மகன் சீராளனை வெட்டி சமைத்து பரிமாறினார். உணவு சாப்பிடும் முன்பு, சிவபெருமான், 'உன் மகனை அழைத்து வா' என்று கூறினார்.

பரஞ்சோதியாரும், சீராளா என்று அழைத்தார். அவர் உயிர் பெற்றெழுந்தார். மூவருக்கும் சிவபெருமான் முக்தி வழங்கினார். இதுவே சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் நடந்த புராண நிகழ்ச்சியாகும்.

இதையொட்டி, சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், ஸ்ரீகாலபைரவருக்கு இன்று மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us