தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குளத்தில் விழுந்து அக்கா, தம்பி பலி

குளத்தில் விழுந்து அக்கா, தம்பி பலி

குளத்தில் விழுந்து அக்கா, தம்பி பலி


ADDED : அக் 10, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாரி: விவசாய குளத்தில் தவறி விழுந்து, அக்காவும், தம்பியும் உயிரிழந்தனர்.

பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுகாவின், மைலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மூகண்ணனவர். இவருக்கு மஹாங்காளி, 12, என்ற மகளும், சிவராஜ், 9, என்ற மகனும் இருந்தனர்.

மூகண்ணனவர் நேற்று மதியம் தோட்டத்துக்கு சென்றபோது, மகனையும், மகளையும் மூகண்ணனவர், உடன் அழைத்துச் சென்றார்.

தோட்டத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். பிள்ளைகள் விவசாய குளத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி நீரில் விழுந்தனர்.

பணி மும்முரத்தில், பிள்ளைகளை மூகண்ணனவர் கவனிக்கவில்லை. இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தெக்கலகோட்டே போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மஹாங்காளி, சிவராஜின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us