தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நீச்சல் போட்டியில் ஜொலிக்கும் அக்கா – தம்பி

நீச்சல் போட்டியில் ஜொலிக்கும் அக்கா – தம்பி

நீச்சல் போட்டியில் ஜொலிக்கும் அக்கா – தம்பி


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: பெங்களூரு பசவனகுடியில் வசிப்பவர்கள் சிவானந்தா – சுப்ரஜா தம்பதி. இவர்கள் இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது மூத்த மகள் லக் ஷயா, 18, மகன் கிரிஷ், 14, இருவரும் பல ஆண்டுகளாக நீச்சல் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் பெங்களூரு முனிரெட்டி லே – அவுட் பகுதியில் சமீபத்தில் நடந்த நெட்டகலப்பா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.

இதில், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கிரிஷ் நான்கு தங்க பதக்கங்கள் பெற்று அசத்தினார். அதுபோல, லக் ஷா, 21 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார். இருவரும் சிறப்பாக செயல்பட்டதால், சிறந்த வீரர் --– வீராங்கனைகளுக்கான விருது வழங்கப்பட்டது.

இது, அவர்களது குடும்பத்துக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து, அவர்களது பெற்றோர் கூறியதாவது: எங்கள் மகள் லக் ஷயா தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று ஏற்கனவே பதக்கங்களை வென்று உள்ளார்.

இவர்கள் இருவரும் பசவனகுடியில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் பயில்கின்றனர். லக் ஷயா - பயிற்சியாளர் நடராஜிடம், கிரிஷ் - பயிற்சியாளர் ஜான் கிறிஸ்டோபரிடமும் பயிற்சி பெறுகின்றனர்.

இவர்கள், இருவருக்கும் சிறு வயதிலிருந்தே சத்தான உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இவர்களாகவே தான் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென முடிவு செய்தனர். முதலில் எனது மகன் கிரிஷ் தண்ணீரில் இறங்கவே பயந்தான். பழகிக்கொண்டான். ஒரே போட்டியில் இருவரும் பங்கேற்று பதக்கங்கள் வென்றது மட்டுமின்றி, சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிரிஷ் கூறுகையில், “நம்மால் முடியாது என்று எதுவுமில்லை. ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்பதே எனது லட்சியம். இதை செய்து காண்பிப்பேன்,” என்றார்.

லக் ஷயா கூறுகையில், “எனது தந்தை சிவானந்தா ஒரு முன்னாள் மல்யுத்த வீரர். அவர் விளையாட்டுகள் குறித்து எனக்கு நிறைய அறிவுரை வழங்குவார். அவர் மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க நினைத்தார். அவரது கனவை நான் நினைவாக்குவேன். சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று நிச்சயம் பதக்கம் வெல்வேன். நான் ஒரு நடனக்கலைஞரும் கூட. நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று உள்ளேன்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us