/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.ஐ.டி., விசாரணை தர்மஸ்தலாவில் நிறுத்தம்?
/
எஸ்.ஐ.டி., விசாரணை தர்மஸ்தலாவில் நிறுத்தம்?
ADDED : ஆக 15, 2025 05:11 AM

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை நிறுத்தப்படுமா என்பதற்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதில் அளித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா வழக்கில் நடந்து வரும் எஸ்.ஐ.டி., விசாரணையை நிறுத்துவது பற்றி, உள்துறை முடிவு செய்ய முடியாது. எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஒரு வழக்கில் புகார்தாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்கவில்லை என்றால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் வகையில் சட்டத்தில் இடம் உள்ளது.
எதிர்க்கட்சியினர் இடைக்கால அறிக்கை கேட்கின்றனர். அழுத்தத்திற்கு எங்களால் அடிபணிய முடியாது.
தர்மஸ்தலா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் பல முறை அங்கு சென்று உள்ளேன்.
யாராவது வந்து ஏதாவது சொல்வதை கேட்டு, நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம். புகார்தாரர் கூறிய அனைத்தும் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. விசாரணை சரியான பாதையில் செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.