/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னையாவிடம் விசாரிக்க அனுமதி கேட்கும் எஸ்.ஐ.டி.,
/
சின்னையாவிடம் விசாரிக்க அனுமதி கேட்கும் எஸ்.ஐ.டி.,
சின்னையாவிடம் விசாரிக்க அனுமதி கேட்கும் எஸ்.ஐ.டி.,
சின்னையாவிடம் விசாரிக்க அனுமதி கேட்கும் எஸ்.ஐ.டி.,
ADDED : அக் 16, 2025 05:13 AM

மங்களூரு: நீதிபதி முன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தர்மஸ்தலாவில் ஒரே இடத்தில் 10 உடல்களை புதைத்ததாகசின்னையா கூறியதால், அவரிடம் விசாரிக்க, நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அனுமதி கோரியுள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, பொய் புகார் அளித்த சின்னையாவை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
எஸ்.ஐ.டி., காவலில் இருந்தபோது, 'பணத்திற்காக பொய் புகார் அளித்தேன்; என்னை பின்னால் இருந்து ஒரு கும்பல் இயக்கியது' என, கூறியிருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, வழக்கு விசாரணைக்காக சின்னையாவை, பெல்தங்கடி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்த சின்னையா, தர்மஸ்தலாவில் ஒரே இடத்தில் 10 உடல்களை புதைத்ததாக கூறி உள்ளார். இதனால் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சின்னையாவிடம் சிறையில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. வழக்கின் விசாரணைக்கு உதவ, சுற்றுச்சூழல் பற்றிய டி.என்.ஏ., நிபுணர் ஒருவரின் உதவியையும் நாடி உள்ளனர்.