சவுஜன்யா உடல் கிடந்த இடத்தில் எஸ்.ஐ.டி., குழு விரைவில் ஆய்வு
சவுஜன்யா உடல் கிடந்த இடத்தில் எஸ்.ஐ.டி., குழு விரைவில் ஆய்வு
UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 07:36 PM
மங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், எஸ்.ஐ.டி., குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயை சேர்ந்த கல்லுாரி மாணவி சவுஜன்யா, கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சந்தோஷ்ராவ் என்பவரை கைது செய்தது. அவரை, நிரபராதி என கூறி, கடந்த 2024ல் சி.பி.ஐ., நீதிமன்றம் விடுவித்தது.
வழக்கை மறுவிசாரணை நடத்த கோரி, சவுஜன்யா தாய் குஸ்மாவதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 21ம் தேதி அளித்த தீர்ப்பில், வழக்கை மறுவிசாரணைக்கு ஒப்படைத்ததுடன், மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும், கர்நாடக அரசுக்கு கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சசிகுமார் தலைமையில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மங்களூரு, பெல்தங்கடியில் அலுவலகம் அமைந்து உள்ளனர்.
இதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ.,யிடம் இருந்து விசாரணை ஆவணங்களை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, நேரடியாக களத்தில் இறங்க முடிவு உள்ளனர். சவுஜன்யா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், விரைவில் எஸ்.ஐ.டி., குழு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளது.
வரும் டிசம்பர் 21ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
