தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பா.ஜ., தலைவர்களுடன் அரசியல் பேசலை பசனகவுடா பாட்டீல் எத்னால் விளக்கம்

பா.ஜ., தலைவர்களுடன் அரசியல் பேசலை பசனகவுடா பாட்டீல் எத்னால் விளக்கம்

பா.ஜ., தலைவர்களுடன் அரசியல் பேசலை பசனகவுடா பாட்டீல் எத்னால் விளக்கம்


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயபுரா: “பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் முருகேஷ் நிரானியை சந்தித்த போது, அரசியல் பேசவில்லை. இது தற்செயலாக நடந்த சந்திப்பு,” என, விஜயபுரா எம்.எல்.ஏ., – பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.

விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

விஜயேந்திராவை தற்செயலாக சந்தித்தேன். அவருடன் அரசியல் எதுவும் பேசவில்லை. பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்.

கடந்த 30 முதல், 36 ஆண்டுகளாக, நாராயண பான்டகே வீட்டில், தசரா நேரத்தில் உணவு ஏற்பாடு செய்வது வழக்கம். இம்முறையும் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூஜை வைத்திருந்தார். பிரசாதம் பெறுவதற்காக, நான் சென்றிருந்தேன்.

அது போல, முருகேஷ் நிரானியும் வந்திருந்தார். இருவரும் உணவருந்தினோம். அதன் பின் என் வாகனத்தில் நான் சென்றேன். அவரது வாகனத்தில் அவர் சென்றார். முருகேஷ் நிரானியுடனும் அரசியல் பேசவில்லை.

என்னை மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்துக் கொள்வது குறித்து, மேலிடத் தலைவர்கள் அழைத்து பேசுவர்.

அதுசார்ந்த அனைத்து பேச்சும் டில்லியில் தான் நடக்கும். நாளை நான் டில்லிக்குச் செல்ல உள்ளேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன்.

ஆனால், எந்த தலைவரையும் சந்திக்கவோ, என்னை கட்சியில் சேருங்கள் என மன்றாடவோ மாட்டேன்.

கரும்பு விவசாயிகள், பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, நான் டில்லிக்கு செல்கிறேன்.

என்னுடன் பேசாதவர்கள் கூட, கடந்த இரண்டு நாட்களாக பேச துவங்கியுள்ளனர். நான் பா.ஜ.,வுக்கு திரும்புவேன் என, எனக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

வாஜ்பாய் காலத்தில் இருந்தே நான் பணியாற்றினேன். இதை கட்சி மேலிட தலைவர்கள் உணர வேண்டும்.

என்னை கட்சியில் சேர்ப்பதாக இருந்தால், முக்கியமான பொறுப்பை அளிக்க வேண்டும். நான் எப்போதும் பா.ஜ.,வுக்கு எதிராக செயல்பட்டது இல்லை.

கர்நாடகாவில் குமாரசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார். பா.ஜ.,வை மக்கள் எப்படி நம்புவர்?

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us