தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் பணத்தாசை பிடித்தவர்: கூறுகிறார் நிகில்

 சிவகுமார் பணத்தாசை பிடித்தவர்: கூறுகிறார் நிகில்

 சிவகுமார் பணத்தாசை பிடித்தவர்: கூறுகிறார் நிகில்


ADDED : மே 21, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: ''சிவகுமார் பணத்தாசை பிடித்தவர்,'' என, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குற்றம் சாட்டி உள்ளார்.

நிகில் அளித்த பேட்டி:

ம.ஜ.த.,வை பற்றி சிவகுமார் கவலைப்பட வேண்டாம். துணை முதல்வர் என்றால் ஆணவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை.

அவருக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்; நான் யார் என்பதை அவர் தெரிந்து கொள்வார்.

முதல்வரும், துணை முதல்வரும் நாற்காலிக்காக சண்டையிட்டு கொள்கின்றனர். இதை மக்கள் அனைவரும் பார்த்து கொண்டே இருக்கின்றனர். சிவகுமார் டில்லியில் மாத சம்பளம் வாங்குகிறவர்; பணத்தாசை பிடித்தவர்.

பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் போல செயல்படுகின்றனர். கமிஷன் ஏஜன்ட், தரகர்களை அழைத்து போலியான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

சிவகுமார் உங்களது ஆணவம் நிறைந்த பேச்சு நீண்ட காலம் நீடிக்காது. இதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us