/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்துகளை முறைப்படுத்தும் 'ஏ' பட்டா அறிமுகம்; 6வது வாக்குறுதி என சிவகுமார் பெருமிதம்
/
சொத்துகளை முறைப்படுத்தும் 'ஏ' பட்டா அறிமுகம்; 6வது வாக்குறுதி என சிவகுமார் பெருமிதம்
சொத்துகளை முறைப்படுத்தும் 'ஏ' பட்டா அறிமுகம்; 6வது வாக்குறுதி என சிவகுமார் பெருமிதம்
சொத்துகளை முறைப்படுத்தும் 'ஏ' பட்டா அறிமுகம்; 6வது வாக்குறுதி என சிவகுமார் பெருமிதம்
ADDED : அக் 16, 2025 05:16 AM
பெங்களூரு: சொத்துகளை ஒழுங்குபடுத்தும் 'ஏ' பட்டா பெற இணையதள முகவரியை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று அறிமுகம் செய்தார். இது காங்கிரஸ் அரசின் ஆறாவது வாக்குறுதி என்றும் கூறினார்.
பெங்களூரில் விவசாய நிலத்தில் குடியிருப்பு, கட்டடங்களை கட்டுவோருக்கு, மாநகராட்சி சார்பில் 'பி' பட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டாவை வைத்திருப்பது பிரச்னையாகவே கருதப்பட்டது. சொத்துக்கு 'பி' பட்டா இருந்தாலும், அந்த சொத்து, சட்டபூர்வமாக அங்கீரிக்கப்படவில்லை.
'பி' பட்டாவை கொண்டு, வங்கியில் கடன் பெற முடியாது. சொத்தை அவ்வளவு எளிதில் விற்க முடியாது. சட்டவிரோத கட்டடம் என்று எந்த நேரத்திலும், இடித்து தள்ளப்படும் அபாயமும் இருந்தது.
25 லட்சம் சொத்து சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் 'பி' பட்டாவை, சட்டபூர்வமாக அங்கீரிக்கப்பட்ட 'ஏ' பட்டாவாக மாற்றம் செய்வது குறித்து அரசு ஆலோசித்தது. இந்நிலையில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்பில் வரும் 'பி' பட்டா சொத்துக்களை 'ஏ' பட்டா சொத்துக்களாக மாற்றும் திட்டத்திற்கான இணையதள முகவரியை, பெங்களூரு ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில், துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
ஜி.பி.ஏ., எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 25 லட்சம் சொத்துகள் உள்ளன. 7.50 லட்சம் சொத்துக்களுக்கு 'பி' பட்டாவும்; 7.50 லட்சம் சொத்துக்களுக்கு 'ஏ' பட்டாவும் உள்ளது. மேலும் ஏழு முதல் எட்டு லட்சம் சொத்துக்களுக்கு 'பி' பட்டா கூட இல்லை.
சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் 'பி' பட்டாவில் உள்ள சொத்துக்களை 'ஏ' பட்டாவிற்கு மாற்ற, வரலாற்று சிறப்புமிக்க முடிவை அரசு எடுத்துள்ளது. இதனால், 15 லட்சம் சொத்துக்களின் உரிமையாளர்கள் பயன் அடைவர்.
'பி' பட்டாவில் உள்ள சொத்துகளுக்கு 'ஏ' பட்டா வாங்கவும், புதிய சொத்துக்களை 'ஏ' பட்டாவில் பதிவு செய்யவும் https://BBMP.karnataka.gov.in/BtoAKhata என்ற இணையதள முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது 2,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட, சொத்துக்களுக்கு பொருந்தும்.
தீபாவளி பரிசு தவிர, 2,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள சொத்துக்களுக்கு, 'ஏ' பட்டா வாங்க https://BPAS.bbmpgov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
நவம்பர் 1ம் தேதியில் இருந்து 100 நாட்களுக்குள் பட்டா மாற்றிக் கொள்ளலாம். பட்டா மாற்ற ஆன்லைனில் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின், ஜி.பி.ஏ., ஊழியர்கள், உங்கள் வீட்டின் வாசலுக்கே வந்து 'ஏ' பட்டா வழங்கிச் செல்வர். தீபாவளி பரிசாக மக்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
சொத்து உரிமையாளர்கள் சொத்து வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதத்தை, அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். 100 நாட்களுக்கு பின், கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். பெங்களூரு ஒன் மையத்திலும் பட்டா மாற்ற பதிவு செய்யலாம். இதில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எளிதாக கடன் அங்கீகரிப்படாத, சட்டவிரோத சொத்துகளை விற்பனை செய்வதை தடுக்கவே பட்டா மாற்றம் நடக்கிறது. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின், ஜி.பி.ஏ., ஊழியர்கள், சொத்துக்கள் முன் உரிமையாளர்களை நிறுத்தி வீடியோ, புகைப்படம் எடுத்து பதிவு செய்வர்.
பட்டா மாற்றம் தொடர்பாக, 50 ஆண்டுகளாக இதுபோன்ற முடிவு எடுக்கவில்லை. பட்டா மாற்றம் காங்கிரஸ் அரசின் ஆறாவது வாக்குறுதி திட்டம். உங்கள் சொத்து, உங்கள் உரிமை. 'பி' பட்டா வைத்திருந்தவர்கள், வங்கி கடன் பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது. 'ஏ' பட்டாவாக மாற்றும்போது எளிதாக கடன் பெறலாம்.
சொத்து பதிவுகளை டிஜிட்டல்மயமாக்கத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு விருது வழங்கி உள்ளது. நாட்டில் இதுபோன்ற புரட்சிகரமான நடவடிக்கை யாரும் எடுக்கவில்லை என்று பாராட்டு கிடைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.