/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திட்ட அனுமதியின்றி வீடு சிவகுமார் எச்சரிக்கை
/
திட்ட அனுமதியின்றி வீடு சிவகுமார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 12:55 AM

பெங்களூரு : “கட்டட திட்ட அனுமதியின்றி இனி யாரும் வீடு கட்டாதீர்கள்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்டட திட்ட அனுமதி, உடைமை சான்றிதழ் இல்லாமல் கட்டப்படும் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுதும் பொருந்தும். இது மக்களுக்கு நிறைய சிக்கலை ஏற்படுத்தும்.
கர்நாடகாவில் கட்டட திட்ட அனுமதி பெறாமல் வீடு கட்டிய 2.50 லட்சம் பேர் மின்சாரம், குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் விவாதித்துள்ளோம். மக்களுக்கு எப்படி உதவுவது என்று கேட்டுள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். மற்ற மாநிலங்களில் இந்த பிரச்னை எப்படி தீர்க்கப்படுகிறது என்பது குறித்த தகவலும் சேகரிக்கப்படும்.
கட்டட திட்ட அனுமதி இன்றி, யாரும் இனி வீடு கட்டாதீர்கள். அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை, சட்டபூர்வமாக மாற்றுவது கடினம்.
சட்டவிரோத வீடுகள் கட்டிய மக்கள் இப்போது சந்திக்கும் பிரச்னையை தீர்க்க, சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாக செய்வோம்.
பெங்களூரில் புதிதாக இணைக்கப்பட்ட 110 கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளது.
இதில் பெங்களூரு குடிநீர் வாரியம் சில சவால்களை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு 39,000 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இந்த ஆண்டு 300 இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.