தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவானந்த் நீலண்ணவர் நிகழ்ச்சி நடிகர் - நடிகையருக்கு கிலி

 சிவானந்த் நீலண்ணவர் நிகழ்ச்சி நடிகர் - நடிகையருக்கு கிலி

 சிவானந்த் நீலண்ணவர் நிகழ்ச்சி நடிகர் - நடிகையருக்கு கிலி


ADDED : ஜூன் 10, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான, சிவம் அசோசியேட்ஸ் நிறுவன உரிமையாளர் சிவானந்த் நீலண்ணவரிடம், சி.ஐ.டி., அதிகாரிகள் பல கோணங்களில், விசாரணை நடத்துகின்றனர். இவர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர், நடிகைகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெலகாவி நகரில், சிவம் அசோசியேட்ஸ் நிறுவனம் மூலமாக, ஆயிரக்கணக்கான மக்களிடம், சட்டவிரோதமாக முதலீடு வசூலித்த குற்றச்சாட்டில், சிவானந்த் நீலண்ணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் சி.ஐ.டி., அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். இவருடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகையரிடமும் விசாரணை நடத்த, அதிகாரிகள் தயாராகின்றனர்.

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியன்று, பெலகாவியில் ஆடம்பரமாக, 'கன்னட திருவிழா' கொண்டாடினார். இதில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சிவானந்த் நீலண்ணவர், லட்சம், லட்சமாக பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர்கள் தனஞ்செய், நீனாசம் சதீஷ், வசிஷ்டா சிம்ஹா, ராஜேஷ் கிருஷ்ணா, திகந்த், நடிகைகள் சப்தமி கவுடா, ஐந்த்ரிகா ராய் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்த சி.ஐ.டி., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் நடிகர், நடிகையர் நடுக்கத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us