/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பூட்ஸை கழற்றி அடிப்பேன்' என மிரட்டல் முதல்வர் அதிகாரி மீது சிவா தரப்பு புகார்
/
'பூட்ஸை கழற்றி அடிப்பேன்' என மிரட்டல் முதல்வர் அதிகாரி மீது சிவா தரப்பு புகார்
'பூட்ஸை கழற்றி அடிப்பேன்' என மிரட்டல் முதல்வர் அதிகாரி மீது சிவா தரப்பு புகார்
'பூட்ஸை கழற்றி அடிப்பேன்' என மிரட்டல் முதல்வர் அதிகாரி மீது சிவா தரப்பு புகார்
ADDED : ஜூலை 26, 2025 05:03 AM
'பூட்ஸை கழற்றி அடிப்பேன்,' என்று மிரட்டியதாக, முதல்வர் சித்தராமையாவின் சிறப்பு அதிகாரி மீது, துணை முதல்வர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரி, தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
டில்லியில் உள்ள கர்நாடக பவனில், உதவி குடியிருப்பு கமிஷனராக பணியாற்றுபவர் ஐ.ஏ.எஸ். மோகன் குமார். இவர், முதல்வர் சித்தராமையாவின் சிறப்பு அதிகாரியாகவும் உள்ளார். இதுபோல இங்கு துணை முதல்வர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரியாக ஆஞ்சநேயா என்பவர் உள்ளார். இவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லை. சிவகுமாரால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில் மேலிட தலைவர்களை சந்தித்துப் பேச சித்தராமையாவும், சிவகுமாரும் டில்லி சென்றுள்ளனர். கர்நாடக பவனில் தங்களுக்கான அறைகளில் தங்கி உள்ளனர்.
நேற்று காலை முதல்வர், துணை முதல்வரின் சிறப்பு அதிகாரிகளான மோகன் குமார், ஆஞ்சநேயா இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். இதை பார்த்து கர்நாடக பவன் அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதையடுத்து தலைமை செயலர் ஷாலினி, கர்நாடக பவன் கமிஷனர் இம்கோங்கலா ஜமீருக்கு ஆஞ்சநேயா எழுதிய கடிதத்தில், 'பூட்ஸை கழற்றி அடிப்பேன் என்று கூறியதுடன், மோசமான வார்த்தைகளால் திட்டி, கர்நாடக பவன் ஊழியர்கள் முன்னிலையில், முதல்வரின் சிறப்பு அதிகாரி மோகன் குமார் என்னை அவமதித்துவிட்டார்.
'எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அவர் தான் பொறுப்பு. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
இருவருக்கும் இடையே நீயா, நானா போட்டியே பிரச்னைக்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
- நமது நிருபர் -