sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒரே வீட்டில் பதுங்கிய ஆறு மலைப்பாம்புகள்

 ஒரே வீட்டில் பதுங்கிய ஆறு மலைப்பாம்புகள்

 ஒரே வீட்டில் பதுங்கிய ஆறு மலைப்பாம்புகள்


ADDED : பிப் 24, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா: ஒரே வீட்டில் பதுங்கியிருந்த ஆறு மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பீதியடைந்தனர்.

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா குருஷ்ட்கோனா கிராமத்தில் வசிப்பவர் விஜய தலேகர். இவர் தன் வீட்டின் தோட்டத்தில் இரும்பு பெட்டி ஒன்றில், வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வைத்து பூட்டி வைத்திருந்தார். இந்த பெட்டிக்கு அருகில் பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதை, அவர் நேற்று முன்தினம் கண்டறிந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இரும்பு பெட்டியை நகர்த்தி பார்த்தனர். அப்போது, ஒன்றல்ல... இரண்டல்ல... ஆறு மலைப்பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு பாம்பாக பிடித்து கொண்டு சென்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பீதி அடைந்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது:

பொதுவாக ஒரே இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பது அரிது. ஆனால், இங்கு ஒரே இடத்தில் ஆறு மலைப்பாம்புகள் இருந்தன. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்தோம். பின், ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகளை பிடித்தோம். இந்த பாம்புகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us