தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் ரூ.1.50 கோடியில் 'ஸ்கேட்போர்டு' பூங்கா

 பெங்களூரில் ரூ.1.50 கோடியில் 'ஸ்கேட்போர்டு' பூங்கா

 பெங்களூரில் ரூ.1.50 கோடியில் 'ஸ்கேட்போர்டு' பூங்கா


ADDED : ஜன 17, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் கப்பன் பூங்கா முக்கியமானது. கப்பன் பூங்காவில் குழந்தைகளுக்காக பால்பவன் என்ற, சிறுவர் பூங்காவும் உள்ளது.

இங்கு தற்போது, 'ஸ்கேட்போர்டு' பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, 1.50 கோடி ரூபாய் செலவாகும். பூங்கா படகு சவாரி பகுதிக்கு அருகில் அமைய உள்ளது. இத்திட்டம் பால்ப வன் சங்கம், இளைஞர் அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டு துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள், இம்மாதம் இறுதியில் துவங்கி வரும் மே மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கேட்போர்டு பூங்காவில், 5 வயதுக்கு மேம்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படும். குழந்தைகளிடம் விளையாட்டு திறமையை ஊக்குவிப்பது நோக்கமாக உள்ளது. இவர்கள் வரும் காலத்தில் நம் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் அளவிற்கு, திறமையானவர்களாக உருவாக்கப்படுவர். இப்பூங்கா மே மாதத்திற்கு பிறகு செயல்பாட்டுக்கு வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us