தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவரை விட்டு ஓடி போன பெண்ணின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு

 கணவரை விட்டு ஓடி போன பெண்ணின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு

 கணவரை விட்டு ஓடி போன பெண்ணின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு


ADDED : ஏப் 17, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாபஸ்பேட்: காபி தோட்டம் அருகில், பெண்ணின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

துமகூரு மாவட்டத்தின், கியாத்சந்திராவில் வசிப்பவர் மல்லிகார்ஜுன், 40. இவரது மனைவி யமுனா, 35. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், யமுனாவுக்கு ராகவேந்திரா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கணவரை விட்டு விலகி, ஐந்து ஆண்டு ராகவேந்திராவுடன், தொட்டபல்லாபூரில் வாழ்ந்தார். கணவரை விட்டு விலகியது சரியல்ல என்று தவறை உணர்ந்த யமுனா, மனம் திருந்தி, கணவரின் வீட்டுக்கு வந்து வசிக்க துவங்கினார்.

மார்ச், 21ம் தேதியன்று, யமுனாவின் பிறந்த நாள். அன்று தன்னை சந்திக்கும்படி ராகவேந்திரா வலியுறுத்தினார். அதன்படி அவரை சந்திக்க துமகூருக்கு சென்ற யமுனா, வீடு திரும்பாமல் காணாமல் போனார். இது தொடர்பாக, கியாத்சந்திரா போலீஸ் நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். போலீசாரும் யமுனாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், ஹளேநிஜகல் கிராமத்தின் பாக்கு தோட்டம் அருகே, நேற்று காலை மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்தன. அதன் பக்கத்தில் பெண்ணின் கைப்பை, அடையாள அட்டை இருந்தது. இதை பார்த்த தோட்ட உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த தாபஸ்பேட் போலீசார், கைப்பை, அடையாள அட்டையை பார்த்து, அது யமுனா என்பதை அடையாளம் கண்டனர்.

இவரை ராகவேந்திராவே கொலை செய்து பாக்கு தோட்டம் அருகில் வீசி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us