தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., வசம் இருந்த மண்டை ஓடு ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

 தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., வசம் இருந்த மண்டை ஓடு ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

 தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., வசம் இருந்த மண்டை ஓடு ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு


ADDED : மே 23, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., வசம் இருந்த மண்டை ஓடுகள், அரிவாள் உள்ளிட்ட தடயங்கள், எப்.எஸ்.எல்., எனும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நு ாறு பெண்கள் உடலை புதைத்ததாக சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை, அரசு அமைத்தது.

போலீசில் புகார் அளி க்கும் போது, சின்னையா மண்டை ஓட்டையும் கொடுத்து இருந்தார். எஸ்.ஐ.டி., விசாரணையில், சின்னையா பொய் புகார் அளித்தது தெரிந்தது.

அவர் போலீசிடம் கொடுத்த மண்டை ஓடு, தர்மஸ்தலாவின் பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து, விட்டல் கவுடா என்பவர் எடுத்து கொடுத்ததும் தெரிந்தது.

நேற்று முன்தினம் விட்டல் கவுடாவின் கார் டிரைவர் பிரதீப் குலாயை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வனப்பகுதிக்குள் அழைத்து சென்று விசாரித்தனர். மண்டை ஓடு எடுத்ததை, பிரதீப் வீடியோ எடுத்து இருந்தார். அவர் எப்படி வீடியோ எடுத்தார் என்று நடிக்க சொல்லி, அதை பதிவு செய்தனர்.

இந்நிலையில், சின்னையா போலீசிடம் கொடுத்த மண்டை ஓடு, அதை எடுக்க பயன்படுத்தப்பட்ட அரிவாள், வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட தடயங்களை, பெங்களூரில் உள்ள ஆய்வகத் திற்கு, எஸ்.ஐ.டி., போலீசார் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us