ADDED : ஆக 28, 2026 11:18 PM

- நமது நிருபர் -
மணிக்கணக்கில் சமையல் அறையில் இருக்கும் பெண்களுக்கு, சில நேரங்களில் வெறுப்பாக இருக்கும். பண்டிகை நாட்கள், திடீர் விருந்தினர் வரும் போது, தின்பண்டங்கள் செய்ய வேண்டி வரும். அடுப்படியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லாமல், சில நிமிடங்களில், சூப்பரான லட்டு செய்யலாம்.
செய்முறை முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், தேங்காய் துறுவலை போட்டு, அதில் மில்க்மெய்டு சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை கெட்டியாக இருந்தால், கூடுதலாக கால் கப் மில்க்மெய்டை சிறிது, சிறிதாக சேர்த்து கலக்கவும். இதில் ஏலக்காய் துாள், சிறு துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி போட்டு, கையால் கட்டிகள் இல்லாமல் பிசையவும்.
அதன் பின், இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொப்பரை துறுவலில் புரட்டி தட்டில் வைக்கவும். அனைத்து லட்டுகளையும் தயார் செய்தபின் அரை மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
சுவையான லட்டுகள் தயார். மில்க் மெய்டில் ஏற்கனவே சர்க்கரை அம்சம் இருப்பதால், லட்டுகளில் தனியாக சர்க்கரை சேர்க்க வேண்டியது இல்லை.
அடுப்படியில் வியர்வை சிந்தாமல், எளிதாக லட்டு தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவசரத்துக்கு செய்யலாம்!
