/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹம்பியில் படவிலிங்க சுவாமி கோவில் குளத்தில் செருப்பு
/
ஹம்பியில் படவிலிங்க சுவாமி கோவில் குளத்தில் செருப்பு
ஹம்பியில் படவிலிங்க சுவாமி கோவில் குளத்தில் செருப்பு
ஹம்பியில் படவிலிங்க சுவாமி கோவில் குளத்தில் செருப்பு
ADDED : அக் 25, 2025 11:00 PM

விஜயநகரா: ஹம்பியின் வரலாற்று பிரசித்த பெற்ற, படவிலிங்க கோவில் குளத்தில், செருப்பு வீசப்பட்டதால் பக்தர்கள் கோபம் அடைந்துள்ளனர். கோவிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்துகின்றனர்.
விஜயநகரா மாவட்டத்தின், ஹம்பியில் படவிலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இது விஜயநகர சாம்ராஜ்யம் ஆட்சியில், 15வது நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியர், படவிலிங்க சுவாமி கோவிலுக்கு வருகின்றனர்.
கோவில் முன்பாக தீர்த்த குளம் உள்ளது. இதில் உள்ள நீரை தலையில் தெளித்துக் கொண்டால், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய புனிதமான குளத்தில், மர்ம நபர்கள் நேற்று முன் தினம் செருப்பை வீசியுள்ளனர்.
இதை கண்டு, பக்தர்கள் கோபம் அடைந்தனர். செருப்பு வீசியவரை கண்டுப்பிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் வலியுறுத்துகின்றனர்.குளத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவத்துக்கு பின், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பக்தர்களை சமாதானம் செய்தனர்.
கோவிலுக்கு பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்கும்படி, அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

