/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தகாத உறவு வைத்திருப்பதாக கூறி கூந்தலை வெட்டி பெண்ணுக்கு கொடுமை
/
தகாத உறவு வைத்திருப்பதாக கூறி கூந்தலை வெட்டி பெண்ணுக்கு கொடுமை
தகாத உறவு வைத்திருப்பதாக கூறி கூந்தலை வெட்டி பெண்ணுக்கு கொடுமை
தகாத உறவு வைத்திருப்பதாக கூறி கூந்தலை வெட்டி பெண்ணுக்கு கொடுமை
ADDED : அக் 25, 2025 11:01 PM
யாத்கிர்: மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, பெண்ணின் கூந்தலை வெட்டி கொடுமைப்படுத்தி, தாக்கிய 11 பேர் மீது, வழக்குப் பதிவாகியுள்ளது.
யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின் ஜாமனாளா கிராமத்தில் வசிப்பவர் கங்காபாய், 35. இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது பக்கத்து ஊரில் உள்ள தன் சித்தி வீட்டுக்குச் செல்வார். சிகிச்சை பெற்று வருவார். அப்போது இவரை மருமகன் அனில் ராமு ராத்தோட் உடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
இதை கண்ட கிராமத்தினர், தன் மருமகனுடன் கங்காபாய் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தனர். கிராமத்தின் டாக்கப்பா, இவரது மனைவி கஸ்துாரி உட்பட, பலரும் இம்மாதம் 16ம் தேதி, கங்காபாயை வீடு புகுந்து தாக்கினர்.
'மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு, ஊர் மானத்தை வாங்குகிறாயா?' எனக் கூறி, அவரது தலை கூந்தலை வெட்டினர். முகத்தில் மிளகாய் துாள் வீசினர். தலையில் சுண்ணாம்பு தடவினர். கொலை மிரட்டல் விடுத்துத் தாக்கினர்.
பலத்த காயமடைந்த கங்காபாய், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், நேற்று முன் தினம் கிராமத்துக்கு சென்று, கங்காபாயிடம் புகார் பெற்றனர். புகாரின்படி, டாக்கப்பா, கஸ்துாரி, விஜயகுமார் கிஷன் ராத்தோட் உட்பட, 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். கஸ்துாரி மற்றும் டாக்கப்பா நேற்று கைது செய்யப்பட்டனர்.
மற்ற ஒன்பது பேர், மஹாராஷ்டிராவின், பல்வேறு இடங்களில் தலைமறைவாக உள்ளனர். தங்களின் மொபைல் போனையும் 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளனர். 'அவர்களை விரைவில் கைது செய்வோம்' என, போலீசார் தெரிவித்தனர்.

