/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இறைச்சிக்காக மாடுகள் கடத்தல்: லாரி டிரைவர் சுட்டு பிடிப்பு
/
இறைச்சிக்காக மாடுகள் கடத்தல்: லாரி டிரைவர் சுட்டு பிடிப்பு
இறைச்சிக்காக மாடுகள் கடத்தல்: லாரி டிரைவர் சுட்டு பிடிப்பு
இறைச்சிக்காக மாடுகள் கடத்தல்: லாரி டிரைவர் சுட்டு பிடிப்பு
ADDED : அக் 23, 2025 11:12 PM
புத்துார்: மாடுகளை கடத்திச் சென்ற லாரியை, 10 கி.மீ., துாரம் வரை விரட்டிச் சென்று போலீசார் பிடித்தனர்; 12 மாடுகள் மீட்கப்பட்டன. தப்பியோடிய லாரி டிரைவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின், ஈஸ்வர மங்களா பெள்ளிசடவி கிராமம் வழியாக, லாரியில் மாடுகள் கடத்தப்படுவதாக, தகவல் கிடைத்தது.
நேற்று முன் தினம் காலை, புத்துார் ஊரக போலீசார், அந்த இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அந்த வழியாக வந்த லாரியை தடுத்தபோது, ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
போலீசாரும் 10 கி.மீ., துாரம் விரட்டிச் சென்று, லாரியை மடக்கினர். லாரி ஓட்டுநர், போலீசாரின் ஜீப் மீது மோத முற்பட்டார். போலீசார் தற்காப்புக்காக சுட்டதில், காலில் குண்டு பாய்ந்து, ஓட்டுநர் விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். லாரியில் இருந்த மற்றொருவர் தப்பிவிட்டார்.
லாரியில் இருந்த, 12 மாடுகளை போலீசார் மீட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஓட்டுநரின் பெயர் அப்துல்லா, 40, என்பது தெரியவந்தது. இவர், கேரளாவின் காசர்கோடை சேர்ந்தவர்.
மாடுகளை ஹாசனில் இருந்து, கேரளாவுக்கு கடத்தியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடுகின்றனர்.

