எஸ்.எம்.வி.டி., – பெலகாவி இன்று சிறப்பு ரயில் இயக்கம்
எஸ்.எம்.வி.டி., – பெலகாவி இன்று சிறப்பு ரயில் இயக்கம்
UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 08:16 PM
பெங்களூரு: தீபாவளியை முன்னிட்டு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – பெலகாவி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தென்மேற்கு ரயில்வே அறிக்கை:
தீபாவளி, சாத் பண்டிகையை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து பீஹாரின் முசாபர்பூருக்கு வரும் 9, 16, 23ம் தேதிகளில், திங்கள்கிழமைதோறும், சிறப்பு ரயில் 06505 இயக்கப்படுகிறது.
இந்த ரயில் எலஹங்கா, ஹிந்துப்பூர், தர்மாவரம், அனந்தபூர், ராய்ச்சூர், வாடி, கலபுரகி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும்.
அது போல, யஷ்வந்த்பூரில் இருந்து உத்தரகண்ட் யோக் நகரி ரிஷிகேஷுக்கு, 12ம் தேதி சிறப்பு ரயில் 06597 இயங்குகிறது. யஷ்வந்த்பூரில் இருந்து பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு 19ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம் 17ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், சிறப்பு ரயில் 05542 புறப்படுகிறது.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – பெலகாவிக்கு இன்று முதல், மூன்று நாட்கள் சிறப்பு ரயில் 06551 இயங்குகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
