தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உணவகத்தில் அசுத்த கப்களில் ஜூஸ் வழங்கியது கண்டுபிடிப்பு

உணவகத்தில் அசுத்த கப்களில் ஜூஸ் வழங்கியது கண்டுபிடிப்பு

உணவகத்தில் அசுத்த கப்களில் ஜூஸ் வழங்கியது கண்டுபிடிப்பு


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிரபலமான ஷாப்பிங் மால் கடை ஒன்றில், ஜூஸ் குடித்து வீசியெறிந்த கப்களில், இன்னொருவருக்கு ஜூஸ் வழங்குவது தெரிய வந்துள்ளது.

பெங்களூரின் கனகபுரா சாலையில், கோனனகுன்டே கிராசில், போரம் மால் உள்ளது. இந்த மாலில் ஜூஸ் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை உள்ளது. சில நாட்களுக்கு முன், படம் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்த நபர் ஒருவர், இந்த கடையில் பாப் கார்னும், பெப்சியும் ஆர்டர் செய்தார்.

அவருக்கு கடையில் இருந்த கப்களை பார்த்து, சந்தேகம் ஏற்பட்டது. கவுன்டரில் அடுக்கி வைத்திருந்த அனைத்து கப்களையும், பரிசீலித்த போது, 99 சதவீதம் கப்கள், ஏற்கனவே பயன்படுத்தியதை போல இருந்தன.

இதுகுறித்து, கடை ஊழியர்களிடம், அவர் கேள்வி எழுப்பினார். ‘வேறு ஒருவர் குடித்த கப்களில், நாங்கள் ஜூஸ் குடிக்க வேண்டுமா’ என, கேட்டார். அந்த கப்களை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அவர், பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வீடியோவை அறிந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள், மாலில் உள்ள அந்த தின்பண்டக்கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, விதிமுறைகள் மீறப்படுவது தெரிந்தது. அந்த கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இது குறித்து, சுகாதார துறை அமைச்சர் காதர் கூறியதாவது:

மாலில் உள்ள உணவகத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதாக, புகார் வந்தது. அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த போது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது உறுதியானது.

அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜூஸ் விற்ற கவுன்டர், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வியாபாரத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, உணவக உரிமையாளர்கள், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் அளிக்க வேண்டும்.

மால்களில் அதிக பணம் கொடுத்து, உணவு, குளிர்பானங்கள் வாங்கும் பொதுமக்களுக்கு, இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாகும். மக்கள் எந்த பொருளையும் வாங்குவற்கு முன், அதன் துாய்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us