தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்., கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பெங்., கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பெங்., கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: பெங்களூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி, மாண்டியாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

மாண்டியாவை சேர்ந்தவர் வீரேஷ், 28. இவரது மனைவி சஹானா, 25. எட்டு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். தம்பதிக்கு, 6 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

பெங்களூரு மாதநாயக்கனஹள்ளியில் மனைவி, பிள்ளைகளுடன் வீரேஷ் வசித்தார். ஆட்டோ ஓட்டினார்.

வீரேஷ் வாடகைக்கு குடியிருந்த கட்டடத்தின், இன்னொரு வீட்டில் திருமணம் ஆகாத ராகுல், 23, வசித்தார். இவருக்கும், சஹானாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த வீரேஷ், மனைவியுடன் சண்டை போட்டார். இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த, 2ம் தேதி கணவருடன் கோபித்து கொண்டு, மாண்டியாவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சஹானா சென்றார். அவருக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி வீரேஷ் அழைத்தார். வீட்டிற்கு வர மறுத்த சஹானா, ராகுலுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

‘உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டேன்’ என வீரேஷ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று காலை மாண்டியா வந்த ராகுல், சஹானாவை சந்தித்தார். வீரேஷ் மீது போலீசில் புகார் அளிக்கலாம் என்று கூறி, பாட்டி வீட்டில் இருந்து, சஹானாவை அழைத்து வந்தார்.

இருவரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். மாண்டியா ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us