ஆக., 15 சுதந்திர தின விழா இலவச மருத்துவ பரிசோதனை
ஆக., 15 சுதந்திர தின விழா இலவச மருத்துவ பரிசோதனை
ADDED : ஆக 13, 2026 12:07 AM
அ நிறம் | அளவு
ராமசந்திரபுரம்: சுதந்திர தினத்தை ஒட்டி, லயன்ஸ் கிளப், அப்துல் கலாம் நல அறக்கட்டளை இணைந்து, நாளை மறுதினம் இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றன.
ராமசந்திரபுரம் பார்வதி கல்யாண மண்டபத்தில் காலை 8:00 முதல், மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. இதில் பங்கேற்போருக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எலும்பியல், பல் பரிசோதனை; பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு கண், காது கேளாதோருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்துடன், ரத்ததான முகாமும் நடக்கிறது.
மேலும் தகவலுக்கு, லயன்ஸ் கிளப் சுகாதார முகாம் தலைவர் லயன் ராமசந்திரனின் 91419 32133 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
