ADDED : ஆக 13, 2026 12:07 AM

அ நிறம் | அளவு
சர்ஜாபூர்: பெங்களூரு ரூரல் ஆனேக்கல் டவுனில் உள்ள வி.பி.எச்.சி., அடுக்கு மாடி குடியிருப்புக்கு அருகில், வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகம்படும்படி சுற்றிய வாலிபரை பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிந்தது. பின், அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் ஆனேக்கல்லை சேர்ந்த பவன் என்ற திக்லு பவன், 23, என தெரிந்தது. ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பி லான, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
