ADDED : ஜூன் 06, 2026 11:38 PM

மைசூரு: கொலை முயற்சி வழக்கில், சமூக ஆர்வலர் கங்கராஜுக்கு, மைசூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
மைசூரு டவுன் ராமகிருஷ்ணாநகரை சேர்ந்தவர் கங்கராஜ். சமூக ஆர்வலரான இவர், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராகவும் உள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா மீதான, 'முடா' வழக்கில், சில ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்து பிரபலமாகி இருந்தார்.
கங்கராஜுக்கும், தனஞ்ஜெய் என்பவருக்கும், 20 லட்சம் ரூபாய் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் தகராறு இருந்தது. கடந்த மாதம் 20ம் தேதி தனஞ்ஜெயை கார் ஏற்றி, கங்கராஜ் கொல்ல முயன்றார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குவெம்புநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமின் கேட்டு, மைசூரு 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதி கங்கராஜுக்கு ஜாமின் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
