ADDED : ஜூன் 06, 2026 11:38 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: ஆண்டர்சன்பேட்டை போலீ ஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ரவுடி ஷரத்குமார் என்ற தொட்ட ஷரத், 34, மீது, 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பலமுறை எச்சரிக்கப்பட்டும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாமல், நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வந்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அதுபோல, ரவுடி அஜய்குமார், 24, என்பவர், ஈ.டி., பிளாக் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீதும் பல வழக்குகள் இருந்ததால், இருவரையும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் வெளியேற்றி உத்தரவிட்டார்.
