பஞ்சமசாலி மடத்தில் 1.5 கிலோ தங்கம் மாயம் எல்லை மேம்பாட்டு வாரிய தலைவர் குற்றச்சாட்டு
பஞ்சமசாலி மடத்தில் 1.5 கிலோ தங்கம் மாயம் எல்லை மேம்பாட்டு வாரிய தலைவர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2026 11:39 PM

தாவணகெரே: ஹரிஹராவில் உள்ள பஞ்சமசாலி மடத்துக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 1.5 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளன. இந்த விஷயத்தை, மடத்தின் நிர்வாகம் மூடி மறைத்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, மாநில எல்லை மேம்பாட்டு வாரிய தலைவர் சோமண்ணா பேவினமரதா, நேற்று அளித்த பேட்டி:
தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவில் உள்ள பஞ்சமசாலி மடம், 2008ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த பூஜைகள், வழிபாடுகளில் பங்கேற்ற பக்தர்கள், மடாதிபதிக்கு தங்க மோதிரம், கிரீடம், காப்பு உட்பட, 1.5 கிலோ தங்க நகைகளை, காணிக்கையாக வழங்கினர்.
நாங்கள் மாநிலம், வெளி மாநிலங்களில் சுற்றுப்பயணம் சென்ற போது, பக்தர்கள் பலரும் பஞ்சமசாலி மடத்துக்கு, தங்கநகைகள் காணிக்கை வழங்கிய விஷயத்தை, எங்களிடம் கூறினர். மடாதிபதிக்கு வழங்கப்பட்ட தங்கநகைகளை நிர்வாகத்தினர், தங்கள் வசம் வைத்துள்ளனர்.
மடம் தொடர்பாக, ஹூப்பள்ளி, பெங்களூரில் முக்கியமான ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. அப்போது மடத்தின் நிர்வாகத்தினர், 27 கோடி ரூபாயை மட்டுமே, கணக்கில் காட்டினர்.
ஆனால் நகைகள் விஷயத்தை பற்றி, எதுவும் கூறவில்லை. 1.5 கிலோ தங்கநகைகளை பற்றி, நிர்வாகிகள் மூடி மறைத்துள்ளனர்.
மடத்தின் பெயரில் எவ்வளவு தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளன. மடத்துக்கு சொந்தமான நிலம் எங்குள்ளது என்பதை, நிர்வாகத்தினர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங் கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
