/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி; கவர்னரிடம் சமூக ஆர்வலர் கடாதி புகார்
/
ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி; கவர்னரிடம் சமூக ஆர்வலர் கடாதி புகார்
ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி; கவர்னரிடம் சமூக ஆர்வலர் கடாதி புகார்
ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி; கவர்னரிடம் சமூக ஆர்வலர் கடாதி புகார்
ADDED : ஏப் 26, 2025 09:17 AM

பெலகாவி: சட்டசபை கூட்டத்தொடரில் ஹனி டிராப் பற்றி பேசி, அரசியலமைப்பை அவமதித்த அமைச்சர் ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்க வேண்டுமென கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பெலகாவி சமூக ஆர்வலர் பீமப்பா கடாதி புகார் செய்து உள்ளார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஹனி டிராப் பிரச்னை குறித்து அமைச்சர் ராஜண்ணா பேசி, அரசியலமைப்பை அவமதித்து உள்ளார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விதான் சவுதாவில் போலீசில் புகார் செய்தேன். என் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ராஜண்ணா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று புகார் கடிதம் கொடுத்து இருக்கிறேன். மாநில, தேசிய அரசியல்வாதிகள் 48 பேரின் பென்டிரைவ் இருப்பதாகவும் ராஜண்ணா கூறினார்.
அவர் கூறியதும் சில அரசியல்வாதிகள் நீதிமன்றத்திற்கு சென்று, தங்களை பற்றி செய்தி வெளியிட கூடாது என்று தடை உத்தரவு வாங்கி வந்து உள்ளனர்.
ஹனி டிராப் பற்றி ராஜண்ணாவிடம் முழு தகவல் உள்ளது. பொதுமக்கள் வரி பணத்தில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. வளர்ச்சி பணிகள், முக்கிய பிரச்னை பற்றி விவாதிக்காமல் ஹனி டிராப் பிரச்னையை எழுப்பி, இரண்டு நாட்கள் கூட்டத்தை வீணடித்து விட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் இந்த விவகாரத்தில் மவுனமாக உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, பா.ஜ., தலைவர்கள் ஹனி டிராப்பில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

