தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விமானத்தில் பள்ளி சிறார்களை சுற்றுலா அனுப்பிய சமூக சேவகர்

 விமானத்தில் பள்ளி சிறார்களை சுற்றுலா அனுப்பிய சமூக சேவகர்

 விமானத்தில் பள்ளி சிறார்களை சுற்றுலா அனுப்பிய சமூக சேவகர்


ADDED : செப் 05, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசு பள்ளி மற்றும் ஆதரவற்றோர் ஆசிரமத்தின், 200க்கும் மேற்பட்ட சிறார்கள், விமானத்தில் மும்பைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவை சேர்ந்த சமூக சேவகர் கிரீஷ். இவர் பள்ளி சிறார்களுக்கு, தன் செலவில் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார்.

தேவனஹள்ளியின், மல்லேபுரா அரசு தொடக்க பள்ளி சிறார்கள் மற்றும் பல்வேறு ஆதரவற்றோர் ஆசிரமத்தின், 200க்கும் மேற்பட்ட சிறார்கள், அவர்களின் பெற்றோரும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் நேற்று புறப்பட்டனர்.

முதன் முறையாக விமானத்தில் பயணித்த சிறார்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு நாட்கள் சிறார்கள், மும்பையின் பல்வேறு இடங்களுக்கு, சுற்றுலா செல்வர்.

அங்குள்ள அம்பேத்கரின், சைத்ரபூமி, அவர் வசித்த வீடு உட்பட, வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களுக்கு செல்வர். புத்தகங்களில் மட்டுமே பார்த்த இடங்களை, நேரில் பார்க்கும் வாய்ப்பு, ஏழை சிறார்களுக்கு கிடைத்துள்ளது.

இதற்கு காரணமான கிரீஷை, பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us