ADDED : செப் 06, 2026 11:18 PM

இங்கு படிக்கும் போது, பெங்களூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக பணியாற்றினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றவர்களிடம் இருந்து பரிதாபமோ, பண உதவியோ தேவை இல்லை என்றும், அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேலைவாய்ப்புகள் தேவை என்பதை உணர்ந்தார்.
இதன் விளைவாக, கடந்த 2017ம் ஆண்டு கையில் போதிய பணம் இல்லாத நிலையிலும், கர்நாடகாவின் வட மாவட்டமான ஹூப்பள்ளியில், மிட்டி கபேயின் முதல் கிளையை துவக்கினார். ஒரு மேஜையில் வெறும் நான்கு பாத்திரங்களுடன் துவங்கிய அந்த கிளையில், பார்வை குறைபாடு, காது கேளாமை, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தினார்.
சேவை, தரத்தின் காரணமாக மிட்டி கபே, பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பெங்களூரு, மும்பை, கொல்கட்டா, லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், உச்ச நீதிமன்றம், பிரபல ஐ.டி., நிறுவனங்களின் வளாக பகுதியில் அமைந்துள்ளது. இவரது கபேக்களில், 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சி, கேட்டரிங் சேவைகள், இதர சமூக திட்டங்களுக்கு மிட்டி கபே உதவுகிறது.
நாடு முழுதும், 6,500 மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகிறது.
'பிரச்னை, மாற்றுத்திறனாளிகள் திறமையில் இல்லை. அவர்களை குறைபாடுடன் பார்க்கும் நம் சமூகத்தின் மீது தான் குறைபாடு உள்ளது' என்று அலினா ஆலம் கூறுகிறார்.
தனது சேவைக்காக தேசிய விருது பெற்றார். இளம் சாதனையாளர் பட்டியலிலும் இடம் பிடித்தார். நிடி ஆயோக்கால், இந்தியாவை மாற்றும் பெண்கள் என்ற விருதும் வழங்கப்பட்டது.
மிட்டி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில், மண் என்று பொருள். வேர்களை பாதுகாக்கும் மண்ணை கொண்டு அழகான பானைகள், சிற்பத்தை உருவாக்குகிறது. ஜாதி, மதம், இனம், பாகுபாடு இல்லாமல் மண் அனைவரையும் ஒற்றுமையாக நடத்துவதால், மிட்டி கபே என்று பெயர் வந்துள்ளது.
