பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மென் பொறியாளர் கைது
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மென் பொறியாளர் கைது
ADDED : ஆக 04, 2026 02:09 AM
பெங்களூரு: பெங்களூரில் தான் குடியிருக்கும் வீட்டின் பெண் உரிமையாளர் குளிப்பதை வீடியோ எடுத்த மென் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பேகூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மஞ்சுநாத். தனியார் நிறுவனம் ஒன்றில், மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டு பெண் உரிமையாளர், குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது, குளியல் அறை ஜன்னல் அருகில் மொபைல் போன் இருந்ததை பார்த்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர், வெளியே வந்தபோது, யாரும் இல்லை. பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தற்போது, தன் வீட்டில் வசித்து வந்த மஞ்சுநாத், அங்கிருந்து ஓடியது தெரியவந்தது.
இது தொடர்பாக, பேகூர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மொபைல் போனை ஆய்வு செய்தபோது, பெண் உரிமையாளர் குளிக்கும் பல வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
