sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 போலி ஆயுர்வேத மருந்து சாப்பிட்ட மென்பொறியாளர் ரூ.48 லட்சம் இழந்ததுடன், சிறுநீரக பாதிப்பால் அவதி

/

 போலி ஆயுர்வேத மருந்து சாப்பிட்ட மென்பொறியாளர் ரூ.48 லட்சம் இழந்ததுடன், சிறுநீரக பாதிப்பால் அவதி

 போலி ஆயுர்வேத மருந்து சாப்பிட்ட மென்பொறியாளர் ரூ.48 லட்சம் இழந்ததுடன், சிறுநீரக பாதிப்பால் அவதி

 போலி ஆயுர்வேத மருந்து சாப்பிட்ட மென்பொறியாளர் ரூ.48 லட்சம் இழந்ததுடன், சிறுநீரக பாதிப்பால் அவதி


ADDED : நவ 24, 2025 03:39 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசவேஸ்வரநகர்: பா லியல் தொடர்பான பிரச் னையால் அவதிப்பட்ட மென் பொறியாளர், போலி யான ஆயுர்வேத மருந்து சாப்பிட்டு, 48 லட்சம் ரூபாயை இழந்தார். மேலும், அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரின் பசவேஸ்வர நகரில் வசிப்பவர் தேஜஸ், 30. இவர் தனியார் நிறுவனத்தில், மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு, 2023ல் திருமணம் நடந்தது. இவருக்கு பாலியல் தொடர்பான பிரச்னை இருந்ததால், கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார்.

கூடாரம் சமீபத்தில், மருத்துவமனைக்கு சென்று, வரும் போது சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கூடாரத்தின் முன் பொருத்தப்பட்டிருந்த போர்டை கவனித்தார். நாட்டு மருத்துவம் மூலமாக, பாலியல் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என, கூறப்பட்டிருந்தது. கூடாரத்துக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த நபர், தன்னை விஜய் குருஜி என, கூறி கொண்டார்.

தேஜஸின் பிரச்னையை கேட்டறிந்தார். யஷ்வந்த்பூரில் உள்ள விஜயலட்சுமி ஆயுர்வேத மருந்து கடையில், 1.60 லட்சம் ரூபாய் விலையுள்ள 1 கிராம் எடை கொண்ட 'தேவராஜ் பூடி' என்ற பெயர் கொண்ட மருந்தை வாங்கி, சாப்பிடும்படி கூறினார். 'மருந்து வாங்க தனியாகத்தான் செல்ல வேண்டும். உங்களுடன் யாரையும் அழைத்து செல்லக்கூடாது. ஆன்லைனில் பணம் செலுத்த கூடாது. பணமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் மருந்தின் சக்தி பலிக்கும்' என, நிபந்தனை விதித்தார்.

அதன்படி தேஜஸ், மருந்தை வாங்கி கொண்டு, விஜய் குருஜியை சந்தித்தார். அப்போது அவர் இந்த மருந்துடன், எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். மருந்து நன்றாக வேலை செய்யும் என கூறி, ஏதோ எண்ணெயை கொடுத்தார். 'இம்மருந்தை, அதே கடையில் மட்டுமே வாங்க வேண்டும்; வேறு எங்கும் கிடைக்காது. மருந்தை பாதியில் நிறுத்தினால், சிகிச்சை பலன் அளிக்காது' என்றார்.

ரூ.48 லட்சம் செலவு இதை நம்பிய தேஜஸ், அதே கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டார். மருந்து வாங்க பணம் இல்லாததால், வங்கியில் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். நடுநடுவே விஜய் குருஜி, 'கூடுதல் சிகிச்சை தேவை. தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்' என, மிரட்டினார். இப்படியே 48 லட்சம் ரூபாய் வரை செலவிட்டும், தேஜசுக்கு குணமடையவில்லை. மாறாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, அவரது சிறுநீரகம் பாதித்திருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், ஞானபாரதி போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் செய்துள்ளார். போலீசாரும், போலி ஆயுர்வேத டாக்டர் விஜய் குருஜி, மருந்துக்கடை மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.

தகவலறிந்த போலீஸ் அதிகாரிகள், சாலை ஓரத்தில் தென்படும் போலியான மருத்துவர்களின் கூடாரங்களை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us