ADDED : மார் 24, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு சார்பில், யாதவகிரியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக, மண் தரம் பரிசோதனையை துவக்கி உள்ளது.
மைசூரு நகரின் மேதர் பிளாக் - சங்கல்ப் அபார்ட்மென்ட் இடையே உள்ள ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க, தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு முடிவு செய்தது.
இதற்காக, கடந்த ஒரு வாரமாக, இங்கு மண்ணின் தரம் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுரங்கப்பாதை அமைப்பதால், ஏற்படும் சாதக, பாதகங்களையும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.