/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பன்னரகட்டா தேசிய பூங்காவில் சோலார் மின் உற்பத்திக்கு திட்டம்
/
பன்னரகட்டா தேசிய பூங்காவில் சோலார் மின் உற்பத்திக்கு திட்டம்
பன்னரகட்டா தேசிய பூங்காவில் சோலார் மின் உற்பத்திக்கு திட்டம்
பன்னரகட்டா தேசிய பூங்காவில் சோலார் மின் உற்பத்திக்கு திட்டம்
ADDED : அக் 30, 2025 04:37 AM

பெங்களூரு: பெங்களூரின் புறநகரில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய, பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பன்னரகட்டா பூங்காவின் செயல் நிர்வாக அதிகாரி சூர்யாசென் கூறியதாவது:
பெங்களூரு புறநகரின், ஆனேக்கல்லில் உள்ள பன்னரகட்டா உயிரியல் தேசிய பூங்காவில், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இங்கு சோலார் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தினாலும், அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் பேனல்கள் பொருத்தப்படவில்லை.
வரும் வாரம், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். அடுத்த ஐந்தாறு மாதங்களில், இங்கு சோலார் மின் உற்பத்தி துவங்கும். பூங்காவின் தேவையை கவனித்து, உற்பத்தி அளவை அதிகரிக்க, பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மின் வினியோகத்துக்கு தேவையான வசதிகளை, பன்னரகட்டா பூங்காவே செய்து கொள்ளும். மின் வினியோகம், கூடுதல் மின்சாரத்தை வேறு இடங்களுக்கு வினியோகிக்கும் பொறுப்பை, பெஸ்காம் ஏற்கும். பன்னரகட்டா பூங்கா பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு சோலார் மின் உற்பத்தி செய்யப் படுகிறது.
பூங்கா நிர்வகிப்புக்கு மின்சாரம் பயன்படுத்துவது உட்பட, பல்வேறு நோக்கங்களுக்கு சோலார் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் மின் தேவைக்காக, 40 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
பூங்காவுக்கு தேவையான மின்சாரத்தை, பெஸ்காம் வழங்குகிறது. சோலார் பேனல் பொருத்தி, மின் உற்பத்தி துவங்கினால், பூங்கா நிர்வகிப்பு செலவு மிச்சமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

