தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதான் சவுதா, விகாஸ் சவுதாவில் சோலார் மின்சார பணிகள் தீவிரம்

 விதான் சவுதா, விகாஸ் சவுதாவில் சோலார் மின்சார பணிகள் தீவிரம்

 விதான் சவுதா, விகாஸ் சவுதாவில் சோலார் மின்சார பணிகள் தீவிரம்


ADDED : ஜன 25, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: விதான்சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்களுக்கு, சோலார் மூலமாக மின்சாரம் வழங்க, சோலார் பலகைகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

இது குறித்து, மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின் விதான்சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்கள், ராஜ்பவன் மற்றும் விதான்சவுதா இடையே உள்ள பகுதியில், மூன்று இடங்களில் சோலார் பலகைகள் பொருத்தப்படுகின்றன. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து, இக்கட்டடங்களுக்கு பயன்படுத்தப்படும். விதான்சவுதா, விகாஸ்சவுதாவுக்கு தேவையான மின்சாரத்தில், 20 சதவீதம் மின்சாரம் சோலார் மூலமாக விநியோகிக்கப்படும்.

விதான்சவுதா அழகுக்கு பாதிப்பு ஏற்படாமல், சோலார் பலகைகள் பொருத்தப்படுகின்றன. இன்னும் 20 நாட்களில் பணிகள் முடிவடையும். பெஸ்காம் மீட்டர் பொருத்திய பின், மின் விநியோகம் துவங்கும். ஆண்டுக்கு 310 முதல் 320 நாட்கள் சோலார் மின்சாரம் உற்பத்தியாகும்.

விதான்சவுதா, விகாஸ்சவுதா கட்டடங்களில், சோலார் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்தால், மற்ற கட்டடங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். மற்ற வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதை விட, சோலார் மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

விகாஸ்சவுதா மேற்கூரையில், ஏற்கனவே 90 கே.வி., மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பலகைகள் பொருத்தப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுகின்றன. தற்போது கட்டடத்தின் வளாகங்களில் சோலார் பலகைகள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us