/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலபிரபா ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர், சிறுவன் பலி
/
மலபிரபா ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர், சிறுவன் பலி
ADDED : ஏப் 14, 2025 05:55 AM

பாகல்கோட் : மலபிரபா ஆற்றில் தத்தளித்த சிறுவனை காப்பாற்ற முயற்சித்த ராணுவ வீரரும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பாகல்கோட் மாவட்டம், ஹன்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்கப்பா, 15. மன்னேரி கிராமத்தில் உள்ள மலபிரபா ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார்.
இவரை போன்றே, கதக் மாவட்டத்தின் பெனகல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மஹந்தேஷ், 25, குளிக்க வந்தார்.
ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற ஷேக்கப்பா, தத்தளிப்பதை பார்த்த மஹந்தேஷ், உடனடியாக ஆற்றில் குதித்து மாணவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், அவராலும் முடியாமல், இருவரும் நீரில் மூழ்கினர்.
இதை பார்த்த அங்கிருந்தோர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், பாதாமி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், இருவரின் உடலையும் அன்றிரவு மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

