/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில வளர்ச்சிக்காக உழையுங்கள் காங்கிரசுக்கு சோமண்ணா அறிவுரை
/
மாநில வளர்ச்சிக்காக உழையுங்கள் காங்கிரசுக்கு சோமண்ணா அறிவுரை
மாநில வளர்ச்சிக்காக உழையுங்கள் காங்கிரசுக்கு சோமண்ணா அறிவுரை
மாநில வளர்ச்சிக்காக உழையுங்கள் காங்கிரசுக்கு சோமண்ணா அறிவுரை
ADDED : மே 02, 2025 05:41 AM

துமகூரு: ''மாநில அரசு காற்றை நோக்கி குண்டு வீசுவதை விட்டு விட்டு, மாநில வளர்ச்சிக்காக உழைப்பது நல்லது,'' என ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்கிறது. ஒன் நேஷன், ஒன் எலக்ஷன், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற திட்டங்கள், தொலை நோக்கு பார்வை கொண்டவை. நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் திட்டங்களாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால், அனைவருக்கும் தெளிவான தகவல்கள் கிடைக்கும். இது ஜாதி சார்பற்ற நாடாகும். இரண்டு ஆண்டுகளாக ஜாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, மத்திய அரசு ஆலோசித்தது. இப்போது அதற்காக தயாராகிறது.
காங்கிரசார் எத்தனையோ ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்தனர். அப்போது ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தீர்வு கண்டுள்ளார். 25 கோடி குடும்பங்களை முன்னேற்றியுள்ளார்.
மாநில அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எந்த மகத்துவமும் இல்லை. அது காலாவதியாகி விட்டது.
ஜாதி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.
மாநில அரசு அறிக்கை, தானாகவே செயலிழக்கும். மாநில அரசு காற்றை நோக்கி குண்டு வீசுவதை விட்டு விட்டு, மாநில வளர்ச்சிக்காக உழைப்பது நல்லது.
காங்கிரசார் கலாசாரம் இல்லாதவர்கள். இதனால் பிரதமர் மோடிக்கு எதிராகபோஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
நாட்டை பற்றி தெரியாதவர்கள், இத்தகையபைத்தியக்காரர்களை வைத்து கொண்டு, நாம் என்ன செய்வது.
இவர்களை விட மனநல மருத்துவமனையில் இருப்போரே மேலானவர்கள். அதை விட மோசமாக காங்கிரசார் நடந்து கொள்கின்றனர். மோடி போன்ற தலைவரை இப்படி அவமதித்தது சரியல்ல.
இவ்வாறு அவர்கூறினார்.

