/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பம் ஏற்படுத்தும் சிலர்'
/
'ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பம் ஏற்படுத்தும் சிலர்'
'ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பம் ஏற்படுத்தும் சிலர்'
'ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பம் ஏற்படுத்தும் சிலர்'
ADDED : செப் 23, 2025 11:48 PM

மங்களூரு : “ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குற்றஞ்சாட்டினார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் நடத்தப்படும்ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வேண்டுமென்றே குழப்பதை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதிலிருந்து ஆதாயம் தேட அவர்கள் முயற்சிக்கின்றனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கணக்கெடுப்பு நடத்துவதில் எந்த பிரச் னையும் இல்லை. மக்களின் பொருளாதாரம், கல்வி குறித்த விரிவான தரவுகள் சேகரிக்கப்படும். இது பல திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளை எளிதில் அடையாளம் காணும். இது அரசுக்கு பெரிதும் உதவும். மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை.
கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவோர், தங்கள் ஜாதி அடையாளத்தை இழக்கின்றனர். லிங்காயத் கிறிஸ்தவர், கவுடா கிறிஸ்தவர் என்ற ஜாதிகள் இல்லை. இந்த கணக்கெடுப்பு சுமூகமாக நடக்கும். கடந்த காலத்தில் கணக்கெடுப்பு நடத்த கூறி மக்கள் சொன்னதை வைத்தே நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.