/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடி போதையில் தாயை கொன்ற மகன் கைது
/
குடி போதையில் தாயை கொன்ற மகன் கைது
ADDED : அக் 04, 2025 04:33 AM
ஹாசன்: சமையல் செய்யாத தாயை, குடிபோதையில் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவின், கதாளுசன்னாபுரா கிராமத்தில் வசித்தவர் பிரேமா, 45. இவரது மகன் சந்தோஷ், 19. சந்தோஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தாயிடம் தகராறு செய்வார்.
நேற்று முன் தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், தாயிடம் உணவு பரிமாறும்படி கேட்டார். ஆனால் அவரோ, எதுவும் சமைக்கவில்லை. ஆத்திரமடைந்த சந்தோஷ், தாயை திட்டினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, உருட்டுக்கட்டையால் தாயின் மண்டையில் ஓங்கி அடித்தார்.
படுகாயமடைந்த பிரேமா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஆலுார் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சந்தோஷை கைது செய்தனர்.