/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
/
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
ADDED : செப் 09, 2025 05:13 AM

ஆனேக்கல்: மனைவி பிரிந்து சென்றதால், மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லை சேர்ந்தவர் ருக்மணி, 55. இவரது மகள் நந்தினி, 32. இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வேணுகோபால், 34, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு நந்தினி சென்றுவிட்டார்.
மனைவி தன்னை பிரிந்து சென்றதற்கு, அவரது தாய் ருக்மணி தான் காரணமென வேணுகோபால் நினைத்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ருக்மணி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற வேணுகோபால், அரிவாளால் முதுகில் வெட்டிவிட்டு தப்பினார். பலத்த வெட்டு காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நந்தினி அளித்த புகாரில் வேணுகோபால் கைது செய்யப்பட்டார்.