தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருமகன் கொலை மாமனார் கைது

 மருமகன் கொலை மாமனார் கைது

 மருமகன் கொலை மாமனார் கைது


ADDED : செப் 26, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின், ஆலதஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ராஜா நாயக், 60. இவரது மகளை அதே கிராமத்தின் தேவராஜ் நாயக், 35, என்பவருக்கு, திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

தம்பதிக்குள் ஒத்து போகவில்லை. அவ்வப்போது சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில், மனைவி கோபித்து கொண்டு, கணவரை விட்டு பிரிந்து சென்றார்.

மனைவி பிரிந்து சென்ற பின், மாமனார், மருமகன் இடையே மனக்கசப்பு அதிகரித்தது. தினம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து, தகராறு செய்து கொள்வர்.

இதற்கிடையே, மாமா ராஜா நாயக், தன் நிலத்தில் தென்னங்கன்று நட்டிருந்தார். இதில், இரண்டு செடிகளை, மருமகன் தேவராஜ் நாயக், நேற்று காலை வெட்டி போட்டார். இதனால் கோபமடைந்த ராஜா நாயக், அரிவாளால் மருமகனை வெட்டி கொலை செய்தார்.

பஞ்சனஹள்ளி போலீசார், ராஜா நாயக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us