தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ளக்காதலன் மிரட்டியதால் 2 குழந்தையின் தாய் தற்கொலை

 கள்ளக்காதலன் மிரட்டியதால் 2 குழந்தையின் தாய் தற்கொலை

 கள்ளக்காதலன் மிரட்டியதால் 2 குழந்தையின் தாய் தற்கொலை


ADDED : செப் 26, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதாக, கள்ளக்காதலன் மிரட்டியதால், இரண்டு குழந்தைகளின் தாய் கருத்தடை மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகா லக்கனகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 36. இவரது மனைவி சிந்து, 36. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிந்துவுக்கும், திருமணம் ஆகாத விகாஷ், 28, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இந்த விவகாரம், சிந்துவின் கணவருக்கு தெரிந்ததால் பிரச்னை ஏற்பட்டது. பெரியவர்கள் பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்தனர். பின், கள்ளக்காதலனுடன் பேசுவதை சிந்து தவிர்த்தார். ஆனாலும் விகாஷ் விடவில்லை.

தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்கும்படி சிந்துவை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். அந்த பெண் மறுத்ததால், இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

மனம் உடைந்த சிந்து, நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக கருத்தடை மாத்திரைகளை தின்றார். வாயில் நுரைதள்ளி உயிருக்கு போராடிய அவரை, மைசூரு கே.ஆர்., மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

ஸ்ரீகாந்த் அளித்த புகாரில் விகாஸ், அவரது தந்தை குமார், தாய் வசந்தா மீது ஹுன்சூர் போலீசார் தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us