காலி மனையில் கிடந்த பெண் உடல் மனைவியை கணவர் கொன்றது அம்பலம்
காலி மனையில் கிடந்த பெண் உடல் மனைவியை கணவர் கொன்றது அம்பலம்
ADDED : செப் 26, 2026 03:31 AM

பெங்களூரு: காலி மனையை சுத்தம் செய்யும்படி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் பிறப்பித்த உத்தரவு, கொலை ரகசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
பெங்களூரில் வீடு கட்டாத, காலி மனைகளில் சுற்றுப்பகுதியினர் குப்பை கொட்டுகின்றனர். தேவையற்ற செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாழாகிறது.
இதை மனதில் கொண்டு, காலி மனைகளை சுத்தம் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் எச்சரித்துள்ளது.
அழுகிய உடல் அதன்படி, சம்பிகேஹள்ளி அருகில் உள்ள எம்.எஸ்., நகரின் அக்ரஹரா லே - அவுட்டில் தன் காலி மனையை, சுத்தம் செய்ய முடிவு செய்தார் அந்த இடத்தின் உரிமையாளர். தொழிலாளர்களை வைத்து, அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது மெத்தையில் சுற்றப்பட்ட, அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடை ந்த தொழிலாளர்கள், சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அ ங்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, விசாரணையை துவக்கினர். அப்பெண் உடலில் அணிந்திருந்த உடையில், மால் ஒன்றின் டேக் கிடைத்தது. இதை வைத்து மாலில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அப்பெண்ணின் பெயர் அனுசுயா என்பதும், எம்.எஸ்., நகரின் அக்ரஹாரா லே - அவுட்டில் வசித்ததும் தெரிந்தது.
அந்த வீட்டை கண்டுபிடித்து, அங்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது. அப்பகுதியினரிடம் போலீசார் விசாரித்த போது, அங்கு ஒடிஷாவை சேர்ந்த தம்பதி சாகர்சந்திரராவத், 32, அனுசுயா, 28, தம்பதி வசித்தது தெரிய வந்தது.
அதன் பின், சாகர்சந்திரராவத்தை, கண்டுபிடித்து கைது செய்தனர். மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கூறியதாவது:
ஒடிஷாவை சேர்ந்த சாகர்சந்திரராவத், அனுசுயா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெங்களூருக்கு வந்தனர். இருவரும் தனித்தனி ஹோட்டல்களில் பணியாற்றினர்.
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதியன்று, பணம் விஷயமாக தம்பதி இடையே, தகராறு நடந்தது. அப்போது கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து, கணவர் சாகர்சந்திரராவத் கொலை செய்தார்.
துர்நாற்றம் என்ன செய்வது என, தெரியாமல் மூன்று நாட்கள், மனைவியின் இறந்த உடலுடன் வீட்டில் இருந்தார். துர்நாற்றம் வீசியதால், சிக்கி கொள்வோம் என்ற பயத்தில், மெத்தையில் உடலை சுற்றி, நள்ளிரவு துாக்கி சென்று, அந்த காலி மனையில் வீசினார். அதன்பின் வீட்டுக்கு வந்து, தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்து கொண்டு, வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார்.
